இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு!
நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் நான்கு கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளது.
1. ஆலையடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் வெலிகந்தை வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றம் இரத்தம் விசமானமை ஆகிய காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர், ஹோமகம வைத்தியசாலையில் வைத்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. தர்கா நகரைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் களுத்துறை வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி உயிரிழந்துள்ளார். இருதய நோய், இரத்தம் விசமாகியமை மற்றும் கொவிட் தொற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுடன் அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.