மன்னாரில் சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து இன்றைய தினம் சுகாதார துறையினருக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெற்றது.
முதலாவது கொவிட்-19 தடுப்பூசியை மன்னார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் கே.கே.வின்சனுக்கு செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி வைத்தியர் கதிர்காமநாதன் சுதாகர், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து சுகாதார துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேவேளை, மாவட்டத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் சுகாதார துறையினருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
2ஆம் கட்டமாக வழங்கப்படும் கொவிட்-19 தடுப்பூசிகள் 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.






புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
