வவுனியாவில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கோவிட் தொற்று
வவுனியாவில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலை அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு நேற்று (01.05) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த ஊழியருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், குறித்த தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றியவர்களிடம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் இன்று இரவு வெளியாகிய நிலையில் அதில் மேலும் இரு தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
குறித்த தொற்றாளர்களை கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை,வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள நோயாளர் காவு வண்டி சாரதிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சாரதியை கோவிட் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
