முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்
முல்லைத்தீவு மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் உறுப்பினருக்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அலுவலகத்தின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணியாற்றும் முக்கிய அலுவலகர் ஒருவருக்கு கோவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து இன்றில் இருந்து மக்கள் சேவையினை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்காலத்தில் தங்களுக்கு அறியத் தரப்படும் என்றும் இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு மனம் வருந்துகிறேன் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
