ஜேர்மனியில் சடுதியாக அதிகரிக்கும் கோவிட் வைரஸ் தொற்று! அச்சத்தில் பொதுமக்கள்
ஜேர்மனியில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
அங்குள்ள பாடசாலைகள் சிலவற்றை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகின்றது.
புதிய கோவிட் வைரஸ் இந்த அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய தினம் சடுதியாக உயர்வடைந்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பில் அதிகாரிகளுக்கு அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று மாத்திரம் 7676 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் மூடப்பட்டுள்ள சில பாடசாலைகளை நாளைய தினம் திறப்பதற்கு தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இந்த தொற்று அதிகரிப்பானது சிறு அச்சத்தை அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam