தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா நகரசபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ச.தனுஸ்காந்தின் மனைவிக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவருக்கு மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது குடும்பத்தினருக்கு இன்று (22.11) மேற்கொண்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் நகரசபை உறுப்பினருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களைத்
தனிமைப்படுத்தச் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri