தடுப்பூசியை எதிர்த்து பாதிக்கக்கூடிய கோவிட் பிறழ்வு - சந்திம ஜீவந்தர தகவல்
கோவிட் தடுப்பூசியையும் எதிர்த்து பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும் என கருதப்படுகின்ற புதிய கோவிட் - 19 பிறழ்வு தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், தென் ஆபிரிக்காவின் தொற்று நோய் தொடர்பாக ஆராயும் ஆராய்ச்சி நிறுவனம் இந்த புதிய பிறழ்வு தொடர்பில் அறிவித்துள்ளது. தொற்று நோய்களின்போது இவ்வாறு புதிய பிறழ்வுகள் வெளிப்படுவது இயல்பானது.
First detected in South Africa, C.1.2 has since been found in England, China, the Democratic Republic of the Congo, Mauritius, New Zealand, Portugal and Switzerland.
— Chandima Jeewandara (@chandi2012) August 30, 2021
The combination of these mutations, as well as changes in other parts of the virus, likely help the virus evade antibodies and immune responses, including in patients who have already been infected with the Alpha or Beta variants.
— Chandima Jeewandara (@chandi2012) August 30, 2021
இந்த பிறழ்வின் சேர்க்கைகள் ஏனைய வைரஸின் பாகங்களை விட மாற்றமடைந்தமாகும். C.1.2. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிறழ்வு N440K மற்றும் Y449H என்ற மாற்றங்களையும் காண்பிப்பதாக மேற்கூறப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் கோவிட் - 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக வழங்கப்படும் தடுப்பூசி மனிதர்களின் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி செயற்படக் கூடியது என்று குறிப்பிட்டுள்ளார்.





நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
