வவுனியாவில் பாடசாலை சமூகத்தினருக்கு அடுத்த கிழமை முதல் கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை
வவுனியா மாவட்டத்தில் பாடசாலையில் கடமையாற்றும் அதிபர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட 3025 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இம்மாதம் 12ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 2802 ஆசிரியர்களும், 205 அதிபர்களும், 198 பாடசாலை மற்றும் வலயத்தில் பணியாற்றும் ஏனைய ஊழியர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா வடக்கு வலயத்தில் நெடுங்கேணி பகுதியில் 358 பேரும், ஓமந்தை பகுதியில் 568 பேரும் என 926 பேருக்கும், வவுனியா தெற்கு வலயத்தில் தெற்கு சிங்கள பிரிவில் 383 பேருக்கும், தெற்கு தமிழ் பிரிவில் 1419 பேருக்கும், வெண்கல செட்டிக்குளம் பிரிவில் 477 பேருக்குமாக 2279 பேருக்கும் என மொத்தமாக 3205 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
