கோவிட்டிற்கு எதிரான புதிய ஆராய்ச்சி - நாசி ஸ்ப்ரே குறித்து வெளியாகியுள்ள தகவல்
கோவிட் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாக மூக்குக்கு வழங்க முடியுமா? என்பது குறித்து பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று மூக்கின் ஊடாகவே அதிகளவு பரவும் தன்மைக்கொண்டிருப்பதால், "நாசி ஸ்ப்ரே" என்ற தடுப்பூசிகள் தொடர்பில் பரிசோதனைகள் நடந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சியாமென் பல்கலைக்கழகம், ஹொங்காங் பல்கலைக்கழகம் மற்றும் பெய்ஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவற்றில், இந்த முயற்சிக்கான இரண்டாம் கட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளன.
ஒருவருக்கு வைரஸ் தொற்று, பொதுவாக மூக்கின் வழியே ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர் நத்தலி மில்கரேக் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின்படி கோவிட் வைரஸ் பரவும் கதவை மூடுவதுதான் யோசனையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் சயின்டிஃபிக் அமெரிக்கனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரை நாசி ஸ்ப்ரே தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சிக்கு வழிகோலியது.
ஏனெனில் அவை பாதிக்கப்பட்ட ஒருவரின் சளியில் உள்ள வைரஸ் மீது உடனடி விளைவை ஏற்படுத்தும் என்பதே காரணமாகும்.
அங்கு அவை இம்யூனோகுளோபூலின் ஏ எனப்படும் புறப்பொருள் உற்பத்தியைத் தூண்டுகின்றன. அவை தொற்றுநோயைத் தடுக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது கிடைக்கும் தடுப்பூசிகள் கடுமையான கோவிட்டிற்கு எதிராக வலுவான பாதுகாப்பை வழங்குகின்றன, ஆனால் வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் குறைவான நம்பகத்தன்மை கொண்டுள்ளன.
எனவே மூக்கில் நேரடியாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவது "மற்றவர்களைப் பாதிக்கும் அபாயத்தைக் குறைக்கிறது" என ஆராச்சியாளர் மில்கரேக் கூறியுள்ளார்.
இந்த நாசி ஸ்ப்ரே என்ற தெளிப்புகளுக்கு குளிர்சாதன வசதி தேவையில்லை மற்றும் சுகாதார நிபுணர்களும் தேவையில்லை.
பொது மக்கள் தமது வீடுகளில் வைத்தே இவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஊசிகளை விரும்பாத மில்லியன் கணக்கான மக்களுக்கு அவை மிகவும் பிரயோசனமாக இருக்கும்.
இது தொற்றுநோய்க்கு முன், சமூக தூரமின்றி மற்றும் முகக்கவசங்கள் இல்லாமல் வாழ்க்கைக்கு திரும்ப அனுமதிக்கும்” என்றும் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
you may like this video...
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri