மன்னாரில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு! (Video)
மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகள் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்தவர்களுக்கான மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி .வினோதன் தலைமையில் இராணுவத்தினரின் நெறிப்படுத்தலில் இன்று (10) வெள்ளிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டொஸ்களை பெற்றவர்களுக்கும் அதே நேரம் தடுப்பூசிகளை பெறாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் அதன் ஒரு பகுதியாக மன்னார் பேருந்து நிலையத்திலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இராணுவத்தினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan