ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிடும் தகவல்
நாட்டிலுள்ளஅனைத்து ஆசிரியர்களுக்கும் அடுத்த பத்து நாட்களில் கோவிட் தடுப்பூசியை வழங்கி விட முடியும் என்று கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஊடகங்களிடம் இன்று அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சீன சினோபார்ம் தடுப்பூசிகளின் முதல் அளவு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், நான்கு வாரங்களுக்குள் இரண்டாவது அளவு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நேற்றுவரை மேல் மாகாணத்தில் 86%, இதில் கொழும்பு மாவட்டத்தில் 97%, கம்பாஹா மாவட்டத்தில் 81%, களுத்துறை மாவட்டத்தில் 82%. ஊவா மாகாணத்தில் 60%, பதுளை மாவட்டத்தில் 90%, வடக்கு மாகாணத்தில் 47%, முல்லைதீவு மாவட்டத்தில் 67%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 64%, கிளிநொச்சி மாவட்டத்தில் 64%, மத்திய மாகாணத்தில் 18%, கிழக்கு மாகாணத்தில் 17%, தென் மாகாணத்தில் 15%, வடமேல் மாகாணத்தில் 15%, குருநாகல் மாவட்டத்தில் 22% மற்றும் வட மத்திய மாகாணத்தில் 9%. என்ற அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் இரண்டாவது அளவு தடுப்பூசிகளை முழுமைப்படுத்திய பின்னர், சுகாதார அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களின் படி படிப்படியாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கத்தால் முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.




