கொழும்பில் தோல்வியடைந்த கொவிட் தடுப்பூசி
கொழும்பு மாவட்டத்தில் கொவிட் வைரஸிற்கு எதிராக சைனோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள, இளைஞர் யுவதிகள் விரும்புவதில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அவர்கள் பைசர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருக்கின்றனர். இதன் காரணமாக நகர எல்லைக்குள் இளைஞர், யுவதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் மெதுவாக இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.
நகர எல்லையில் 97000 இளைஞர்கள் உள்ள போதிலும் இதுவரையில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்களுக்கும் குறைவானவர்களே தடுப்பூசி செலுத்தியுள்ளார் என அவர் கூறியுள்ளார்.
கொவிட் தடுப்பு நடவடிக்கைக்காக பைஸர் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதென அடிப்படையற்ற கருத்துக்களை அவர்களாகவே உருவாக்கியுள்ளமை இதற்கு காரணமாகும். எனினும் அந்த கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
