கண்டியில் கோவிட் சினோவெக் தடுப்பூசி உற்பத்திச்சாலை நிறுவ யோசனை முன்மொழிவு
கண்டி - பல்லேகல பகுதியில் கோவிட் தடுப்பூசி உற்பத்திச்சாலை ஒன்றை நிறுவுவதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
சினோவெக் என்னும் தடுப்பூசிகளே இவ்வாறு உற்பத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட்டை கட்டுப்படுத்தும் சினோவெக் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி அண்மையில் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சீனாவின் சினோவெக் பயோடெக் நிறுவனம், கெலுன்லைப் சயன்ஸ் நிறுவனம் மற்றும் அரச மருந்து உற்பத்தி நிறுவனம் ஆகியன இணைந்து இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் உலக அளவில் பெரும் போட்டி நிலவி வருவதாகவும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இலங்கையிலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...