கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு இன்றும் கோவிட் தடுப்பூசி
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் 2ம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை இன்றைய தினம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று ஆரம்பமானது.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை இரண்டிலும் சுமார் 3000 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களிற்கான தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிளிநொச்சி இராணுவ தலைமையகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவினால் இராணுவ தளபதிக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகத் தடுப்பூசி ஏற்றம் பணிகள் இன்று ஆரம்பமாகியது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரியின் கோரிக்கைக்கு அமைவாக இராணுவ தளபதியின் முயற்சியினால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அனுமதிக்கு அமைவாக இன்று தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளையும் சேர்ந்த சுமார் 3000 பணியாளர்களிற்குக் குறித்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தடுப்பூசிகள்
முதல் கட்டமாகத் தேவைப்படும் எனக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி
கேதீஸ்வரன் அண்மையில் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை இங்கு
குறிப்பிடத்தக்கதாகும்.











ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
