யாழில் மேலும் மூன்று கோவிட் சிகிச்சை நிலையங்கள்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச களஞ்சிய கட்டடம் என்பவற்றை கோவிட் சிகிச்சை நிலையங்களாக அமைப்பதற்கு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள வயாவிளானில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றிலும் கோவிட் சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகின்றது.
நாட்டில் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது.சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைகின்றது.
இந்தநிலையில், யாழ்.மாவட்ட செயலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நாவற்குழி அரச களஞ்சியத்தில் 300 நோயாளர் படுக்கைகள் கொண்ட சிகிச்சை நிலையம் அமைக்கப்படவுள்ளது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் வசாவிளான் கட்டடத்தில் இட வசதிக்கு அமைவாக நோயாளர் படுக்கைகளை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ். மாவட்ட அரச களஞ்சியம் மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்
கல்லூரி தொழில்நுட்ப நிறுவனம் என்பவற்றில் மலசலகூடங்கள் உள்ளிட்டவற்றை
அமைக்கும் பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
