லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கோவிட் அச்சுறுத்தல்! வேறு இடங்களுக்கு மாற்றப்படும் சிறுவர்கள்
கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், நாளாந்தம் கண்டறியப்படும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.
தற்போது வைத்தியசாலையில், நாளாந்தம் 15-20 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர் என்று மருத்துவமனையின் இயக்குனர் வைத்தியர் ஜி.வீரசூரிய தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டாலும் மருத்துவமனை நிரம்பியதாகவும், ராஜகிரிய பகுதியில் உள்ள மற்றொரு கட்டிடம் குழந்தைகளை தங்க வைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையின்படி, புதிய கட்டிடத்திற்கு எதிர்காலத்தில் போதுமான இடம் இருக்காது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 20 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
