கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஏழு நாட்களும் முன்னெடுக்கப்படும் கோவிட் பரிசோதனை
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஏழு நாட்களும் கோவிட் பரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது மக்களிடம் இருந்து நேற்றையதினம் (14) கிடைக்கப்பெற்ற முறையீடுகளை அடுத்து அதனை நிர்வத்தி செய்யும் வகையில் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக இந்நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
வாரத்தின் எழு நாட்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அண்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளைப் பொதுமக்கள் வழங்க முடியும்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொதுமக்கள் வைத்தியசாலையின்
சேவைகள் தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொண்டால் அதனை தனது நேரடி
கவனத்திற்குக் கொண்டு வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
