வவுனியா இலங்கை மின்சார சபை காரியாலயம் கோவிட் அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூடல்
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சக உத்தியோகத்தர்களும் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மின் பாவனையாளர் சேவை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும் பொது மக்களின் நலனை கருத்தில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணாத ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் அவசர மின்சார பழுதுகள், மக்களின் முறைப்பாட்டு சேவை போன்றன இயங்கி வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா பிரதம மின்பொறியியலாளர் காரியாலயத்தில் ஒருவருக்கும், வவுனியா மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் இருவருக்கும், மடு மின்சார சேவை நிலையத்தில் ஒருவருக்கும் என நான்கு ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணிய 34 ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.






ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 21 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
