கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களிற்கு வீடுகளிலேயே சிகிச்சை
கோவிட் தொற்றுக்கு இலக்காகி நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் உள்ளவர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் அறிகுறிகள் தென்படாத நிலையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிலர் பிசீஆர் பரிசோதனையில் கண்டறியப்படுகின்றனர்.
அவ்வாறானவர்கள் அவர்களின் வீடுகளிலேயே மாவட்ட சுகாதார பணிமனையின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகளை பெற அனுமதிக்கப்படுவார்கள்.
இது தொடர்பான செயன்முறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த விடயத்தை முதன்மை சுகாதார மற்றும் கோவிட் தடுப்புத்துறை அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
எனினும் கோவிட் அறிகுறி மற்றும் ஏனைய நோய்களை கொண்டுள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
