வத்தளை தடுப்பூசி மையத்தில் முறுகல் நிலை
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி மையத்தில் இன்று காலை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற வந்த மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வத்தளை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு நேற்றைய தினம் வத்தளை - ஹெந்தல வீதியில் அமைந்துள்ள கெரவலபிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்றைய தினமும் தொடரும் என பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக பலர் இன்று அந்த இடத்திற்கு வந்து அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர்.
எனினும், சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் காலை 9 மணியளவில் அந்த இடத்திற்கு வந்து தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுத் தொடர்பிலான அறிவித்தல் பலகை வெளியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவுறுத்திய போதும் அத்தகைய அறிவித்தல் எதவும் காணப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும், தடுப்பூசி வழங்கப்படும் நாட்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என, தடுப்பூசி பெற வந்த பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில தாதியர்கள் சம்பவம் தொடர்பில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
