கோவிட் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மலையக ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள்
தீவிரமாகிவரும் கோவிட் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக நாடு முழுவதும் சர்வமத பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் மலையக ஆலயங்களிலும், பள்ளிவாசல் மற்றும் பௌத்த வழிபாட்டு தலங்களிலும் கோவிட் பிடியிலிருந்து விடுபட விசேட பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
பிரதான இந்து மத வழிபாடு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்தில் தேவஸ்தான குருக்கள் லங்கா தேசமானி, முத்துசாமி ஐயர், பிரசாந்த் சர்மா, ஆலய தேசிகர் ம.ஜெயகாந்த் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்டுள்ளது.
உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட் தொற்றிலிருந்து விடுபட்டு சுபீட்சமானதொரு வாழ்வு மலரவும், உலக மற்றும் இலங்கை மக்களின் நன்மைக்காகவும் சர்வமத பிராத்தனைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
