இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள அவசர நிலை - அதிகபட்ச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு
அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் ஒரு வாரத்திற்குள் அவசரகால நிலையின் பயனுள்ள முடிவுகளை அரசாங்கம் காட்ட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
எனினும், அதிக அதிகாரங்களைக் கொண்டு அவசர நிலையை விதிப்பதன் மூலம் விடயங்களைச் சரி செய்ய முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் ஏற்கனவே அதிகாரத்தை அதிகபட்சமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இப்போது நாட்டின் நிலையை சரி செய்யத் தவறினால் மற்றவர்கள் மீது பழி சுமத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவசரகால நிலையை விதிப்பது தோல்வி என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan