யாழில் 24 மணி நேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும், 270 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் காரைநகரில் 9 பேரும், நல்லூரில் 14 பேரும், சண்டிலிப்பாயில் 8 பேரும், உடுவிலில் 11 பேரும், தெல்லிப்பழையில் 2 பேரும், பருத்தித்துறையில் 28 பேரும், மருதங்கேணியில் 4 பேரும், ஊர்காவற்றுறையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இதுவரை 12746 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 1161 குடும்பங்களைச் சேர்ந்த 3739 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan