எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டில் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரிக்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயததை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நேற்றைய தினம் 3839 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அதேவேளை, நேற்று முன் தினம் 195 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
இது நாட்டில் கோவிட் பரவலடைய ஆரம்பித்த காலம் முதல் நாளொன்றில் பதிவான ஆகக்கூடிய தொற்றாளர்கள் மற்றும் மரணத்தின் எண்ணிக்கையாகும்.
தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் காலங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 20 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
