இலங்கையில் அமுலானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு - பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் பரவல் நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் கடும் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த விசேட நடவடிக்கையானது நேற்றிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக தனி பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
நாட்டை மூடுவதற்கு அரசு எடுத்த முடிவின்படி இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோரை கைது செய்ய நேற்றிரவு 10 மணி முதல் 30ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளைப் பயன்படுத்தி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 19 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
