கொழும்பில் முடக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியின் உண்மை நிலவரம்
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நகரப்பகுதிகளின் வர்த்தக நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
புறக்கோட்டையின் கெய்சர் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் பத்து நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கெய்சர் வீதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பு - புறக்கோட்டையில் அமைந்துள்ள கெய்சர் வீதி, பிரின்ஸ் வீதியில் உள்ள சில வர்த்தக நிலையங்கள் இன்றைய தினம் மூடப்பட்டிருந்த போதும் சில வர்த்தக நிலைங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பகுதிகளில் வழமையான நாட்களை விட சன நடமாட்டம் குறைவாக காணப்பட்ட போதும் முழுமையான முடக்கத்தை அவதானிக்க முடியவில்லை எனவும் தெரியவருகிறது.




தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam