தீர்மானமிக்க எதிர்வரும் 10 நாட்கள் - சுய முடக்க நிலைக்கு செல்லுமாறு கோரி அறிக்கை
தீர்மானமிக்க எதிர்வரும் 10 நாட்கள் சுய முடக்க நிலைக்கு செல்லுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து கட்சிகளும் கூட்டு ஊடக அறிக்கையொன்றை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையானது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சித் தலைவர்களான ரஹூப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் அமீர் அலி ஆகியோரின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வைத்திய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைய சுய முடக்க நிலையை ஏற்படுத்தி கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் எதிர்வரும் தீர்மானமிக்க 10 நாட்களுக்கு இதனை செயற்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்திடம் மக்களின் உயிர்களை காப்பாற்ற எவ்வித திட்டங்களோ அல்லது தேவையோ இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
