செப்டெம்பர் 20 வரை பொது முடக்கத்தை அமுல்படுத்த அரசாங்கத்திற்கு கடும் வலியுறுத்தல்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நாடளாவிய பொது முடக்கத்தை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பொது முடக்கம் குறித்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கோவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனை கருத்திற்கொண்டு செப்டெம்பர் 20ஆம் திகதி வரை நாடளாவிய பொது முடக்கத்தை அமுல்படுத்த வேண்டும்.
நாட்டிலுள்ள அபாயகரமான சூழ்நிலையை தொடர்பில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்ற போதிலும் ஏன் இந்த முடிவை எட்டவில்லை?
அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றாலும், 5,400 பேர் கோவிட்டிற்கு பலியாகியுள்ளனர்.
சமூகம் அச்சத்தில் வாழ்கிறது, மேலும் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டுக்குள் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நாட்டை முழுமையாக திறப்பதற்கு ஒரே வழி முழுமையான தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே என சுட்டிக்காட்டியுள்ளார்.