கோவிட் பரவலை கட்டுப்படுத்த பேராசிரியர் நீலிகா மாலவிகே வலியுறுத்தியுள்ள விடயம்
கோவிட் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உள்ளக ஒன்றுகூடல்களுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூத்த அகவை கொண்டோரின் பெரும்பகுதிக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படும் வரை பெரிய உள்ளக ஒன்றுகூடல்களை இப்போதே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நீலிகா மாலவிகே இந்த விடயத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வின்படி, பாடுவதன் மூலமும் பேசுவதன் மூலமும் சார்ஸ் கோவிட் 2 பரவலுக்கு வாய்ப்பு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
This is precisely why large indoor gatherings should be stopped right now, until a large proportion of the adult population are fully vaccinated (2 weeks after 2nd dose).
— Neelika Malavige (@GMalavige) August 7, 2021