கடந்த மே மாதத்தில் இருந்த நிலைமைக்கு நாடு செல்லும் என எச்சரிக்கை
கோவிட் வைரஸின் டெல்டா திரிபு பரவி வருவதன் காரணமாகவே தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என பரவலாக நம்பப்படுவதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அத்துடன் இலங்கையில் உயிர் வாயு தேவைப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைளில் இந்த நிலைமையை அதிகளவில் காணமுடிகின்றது.
இந்த நிலைமையில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவது பாரிய தவறு.
மக்கள் சுகாதார சட்டங்களை சரியாக பின்பற்றாது போனால், நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்.
அப்படி நடந்தால், கடந்த மே மாதத்தில் இருந்த நிலைமைக்கு நாடு செல்லும் எனவும் விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam