அரசாங்கத்தை சேர்ந்த சில தரப்பினரின் செயற்பாடுகளே தொற்று நோய் அதிகரிக்க காரணம் என குற்றச்சாட்டு
அரசாங்கத்தை சேர்ந்த சில தரப்பினரின் செயற்பாடுகளே கோவிட் நோய் தொற்று அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக மருத்துவ ஆய்வுக் கூட தொழில் நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
40 முதல் 50 வரை இருந்து வந்த கோவிட் மரணங்களில் எண்ணிக்கை தற்போது 67 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சரியாக சிகிச்சை இன்றி இறப்போரின் எண்ணிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்டால், இந்த எண்ணிக்கை இரண்டு, மூன்று மடங்காக அதிகரிகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மரணடைவதை தடுக்கக் கூடிய நோயாளிகள் அதிகளவில் இறந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாமாகவே வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொண்டவர்கள்.
கண்டறியப்படும் கோவிட் தொற்றாளர்களை விட 5 மடங்கான நோயாளர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும்.
பீ.பி.ஜயசுந்தரவுக்கு கோவிட் முடிந்தாலும் சுகாதார சேவையினருக்கு கோவிட் முடியவில்லை.
கட்டில்களுக்கு மேலதிகமாக அனைத்து வைத்திய விடுதிகளிலும் நோயாளிகள் இருக்கின்றனர் எனவும் ரவி குமுதேஸ் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 நிமிடங்கள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
