மிகவும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ள நாடு - அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எச்சரிக்கை
'டெல்டா' வகை நாட்டில் முதன்மை கோவிட் வைரஸ் தொற்றாக உருவெடுப்பதால் நாடு முன்னர் எதிர்கொண்டதை விடவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பல பகுதிகளிலும் 'டெல்டா' கோவிட் மாறுபாடு பதிவாகி வரும் நிலையில், பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது பொருத்தமற்றது.
தற்போதைய நிலையில், தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ள பல நாடுகளும் 'டெல்டா' வைரஸ் பரவலைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
நாட்டின் தற்போதைய நிலை புறக்கணிக்கக்கூடிய சூழ்நிலை அல்ல. மிகவும் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்கொண்டுள்ளது.
அரசும் கொள்கை வகுப்பாளர்களும் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதையும், பொதுமக்கள் அனைத்தையும் மறந்து வருவதையும் காண்கின்றோம்.
இந்த சூழ்நிலையை அரசும், மக்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு பேரழிவு சூழ்நிலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அது நாட்டில் மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri