24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிகளவில் கோவிட் நோயாளர்கள் பதிவு
கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1864 கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் பெருமளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 221 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 81 பேருக்கும், யாழ். மாவட்டத்தில் 23 பேருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல புத்தளம் மாவட்டத்தில் 33 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 45 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 40 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 07 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 08 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
