நோர்வூட் பிரதேசசபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று உறுதி
நோர்வூட் பிரதேசசபையின் மேலும் இரண்டு உறுப்பினர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரதேசசபை செயலாளர் மற்றும் 7 ஊழியர்களுக்கும் தொற்று உறுதியானதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நோர்வூட் பிரதேசசபை தலைவருக்கு தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் தொற்று ஏற்பட முன் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றமை தெரியவந்துள்ளது.
இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 38 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் 10 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக
பொலவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri