மன்னாரில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் பதிவு
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை மேலும் புதிதாக 32 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் 643 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் கோவிட் - 19 நிலவரம் தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். மற்றும் அன்ரிஜன் பரிசோதனைகளின் போது நேற்றைய தினம் மாலை மேலும் புதிதாக 32 கோவிட் - 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான ஒரு மாத காலப்பகுதியில் 643 கோவிட் - 19 தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 1667 தொற்றாளர்களும், மாவட்டத்தில் இதுவரை 1684 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை 19 கோவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam