யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 9 பேரை காவு வாங்கிய கோவிட் தொற்று
யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 9 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ். வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் கோவிட் விடுதியில் மட்டுவிலைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
அத்துடன் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் கோவிட் விடுதியில் சிகிச்சை பெற்ற ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri