யாழ். மாவட்டத்தில் கோவிட்டால் ஒரே நாளில் ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரே நாளில் 5 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தின் கோவிட் அறிக்கையிடல் பிரிவினரால் நேற்றிரவு வெளியிடப்பட்ட நாளாந்த மாவட்ட கோவிட் நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜூலை மாதத்தின் 21 நாட்களில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22ஆக உயர்வடைந்துள்ளது.
இதையடுத்து யாழ். மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்தத் தொகை 117ஆக உயர்வடைந்துள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 35 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 14 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 10 பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 09 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 08 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 06 பேரும், வேலணை பிரதேச செயலர் பிரிவில் 04 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 03 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 03 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 02 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
