கிளிநொச்சியில் மேலும் 14 பொலிஸாருக்கு கோவிட் தொற்று
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் 22 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொற்றுக்குள்ளான பொலிஸாருடன் நெருக்கமான தொடர்பிலிருந்த பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.
இதன்போதே புதிதாக 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த கோவிட் தொற்றுக்குள்ளான
பொலிஸாரின் மொத்த எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam