மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 28 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 28 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அங்கு பதிவாகியுள்ள கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்களின் எண்ணிக்கை 1313 ஆதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். நா.மயூரன் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வாழைச்சேனை, பட்டிப்பளை, செங்கலடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேருக்கும். களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 28 பேருக்கு கடந்த 24 மணித்தியாலயத்தில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் கோவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்த இருவருடன் நேரடியாக தொடர்புடைய உறவினர்களான ஆரையம்பதியில் 7 பேருக்கும், அவ்வாறே மட்டக்களப்பு மாங்கத்தில் 7 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை மாவட்டத்தில் 3ஆவது கோவிட் அலையில் 330 பேராக அதிகரித்துள்ளதுடன், மாவட்டத்தில் 1313ஆக அதிகரித்துள்ளதுடன் 16 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam