கோவிட் தொற்றினால் இளைஞர்-யுவதிகள் மத்தியில் பாலியல் செயலிழப்பு? சுகாதார அமைச்சு என்ன கூறுகிறது?
கோவிட்டினால் பாதிக்கப்பட்ட சில இளைஞர் - யுவதிகள்; பாலியல் செயலிழப்பு மற்றும் கருவுறாமைக்கு ஆளாகிறார்கள் என்று கூறும் பல ஊடக அறிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இலங்கையின் கோவிட் ஒருங்கிணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி, இன்னும் அறிவியல் பூர்வமாக இவ்வாறான பின்விளைவுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், எனவே மக்கள் அதைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் கோரியுள்ளார்.
மேலும், பூஸ்டர் அளவு காரணமாக மலட்டுத்தன்மையை ஏற்படுத்துகிறது என்று கூறும் எந்த அறிக்கையிலும் உண்மை இல்லை என்று ஹம்தானி மீண்டும் வலியுறுத்தினார்.
எனவே, இதுபோன்ற பொய்யான செய்திகளுக்கு மக்கள் ஏமாறாமல், பூஸ்டர் அளவை கூடிய விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
"பூஸ்டர் அளவைப் பொறுத்தவரை, இலங்கையில் இப்போது 52 சதவீதத்தினர் அதனை பெற்றுள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று ஹம்தானி குறிப்பிட்டுள்ளார
May you like this Video





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
