நாட்டில் தீவிரமடையும் கோவிட் நிலை - ஜனாதிபதி இன்று பிறப்பித்துள்ள உத்தரவு
மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாவதை தடுக்க, பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர், இராஜாங்க சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபடுமாறு அவர் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கோவிட் கூட்டத்தில் அவர் இந்த உத்தரவை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
அறிகுறியுடனான நோயாளிகளை இடைநிலை சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி அவர்களின் நிலையை மதிப்பிட்ட பின்னர், மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில், கடந்த மாதத்தில் 120 போராட்டங்கள் நடந்ததாகவும், ஒவ்வொரு போராட்டத்திலும் குறைந்தது 1,500 பேர் பங்கேற்றுள்ளதாகவும் உளவுத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த போராட்டங்கள், நோய் பரவுவதற்கு காரணமாக இருந்ததையும் உளவுத்துறையினர் அவதானித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் கோவிட் தொற்று நிலை தீவிரமடைந்து வருவதாகவும், நாடு முழுவதும் முடக்கலை அமுல்படுத்துமாறும் சுகாதார தரப்பினை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 17 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
