கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
பெரும்பான்மையான மக்கள் கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளும் வரை, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் முடிந்தவரை தங்கள் நடமாட்டங்களை கட்டுப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம், பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி வைத்தியர் பத்மா குணரத்ன, கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் வைத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கோவிட் வைரஸ் நோயாளிகளின் அதிகரிப்பு இப்போது மிக அதிகமாக உள்ளது. நாட்டில் இரண்டாவது முடக்கல் எவ்வாறு கழிந்தது என்பது மக்களுக்குத் தெரியும்.
இரண்டாவது முடக்கலின் போது நாடு சிறந்த முடிவுகளைப் பெறவில்லை. இந்த நிலையில் பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன் வீட்டை விட்டு வெளியே வரும்போது எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
