இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய கோவிட் நெறிமுறைகள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய கோவிட் சுகாதார நெறிமுறைகளை இலங்கை விதிக்காது என சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, இலங்கைக்கு வருபவர்களுக்கு எந்த புதிய கோவிட் நடைமுறைகளும் விதிக்கப்பட மாட்டாது என்பதை சுற்றுலாத்துறைத் தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சுகாதார கட்டுப்பாடுகள்
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு குறிப்பிட்ட சுகாதார கட்டுப்பாடுகளை பல நாடுகள் விரைவாக விதித்து வரும் நிலையில், இலங்கை சுற்றுலாத்துறை, எந்த நாட்டுக்கும் பாரபட்சம் காட்ட விரும்பவில்லை என்று கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது கடந்த வார இறுதியில் சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி, சுகாதார நெறிமுறை பட்டியலை வெளியிட்டது.
எனினும் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து அது திரும்பப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
