தமிழக முதலமைச்சருக்கு கோவிட் நிவாரண நிதி அனுப்பிய ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சிறைக்கைதி
இந்தியாவில் கோவிட் தொற்று நிலைமையானது மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளதை அன்றாடம் செய்திகளின் மூலமாக அறியக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் குறித்த பெருந்துயரில் இருந்து மக்களை மீட்க இந்திய அரசாங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறானரொரு சந்தர்ப்பத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை சிறைக்கைதியான ரவிச்சந்திரன் சிறைக்குள் வேலை செய்ததில் கிடைத்த ஊதியத்தை கோவிட் நிவாரணத்துக்கு வழங்கியுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் இருந்து வரும் ரவிச்சந்திரன், தான் சிறைக்குள் வேலை செய்ததன் மூலம் கிடைத்த ஊதியம் ரூ 5000ஐ முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த கைதியான ரவிச்சந்திரன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri