திடீரென தற்கொலை செய்துகொள்ளும் நோயாளிகள்! அதிர்ச்சி காரணம் - உலக செய்திகள்
சீனாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இது தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுக்கிறது.
இவ்வாறான சூழ்நிலையில் அந்நாட்டின் கிராமபுறங்களில் கோவிட் பரவல் மிகவும் மோசமாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழலில் கிராமபுற மருத்துவமனைகளுக்கு போதிய மருந்துகள் கிடைக்காததால் அவை மூடப்பட்டுள்ளதாகவும், நடுத்தர நகரங்களுக்கு மக்கள் சிகிச்சைக்கு சென்றாலும் அங்கும் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான உலகச் செய்திகள்,