கோவிட் சிகிச்சைக்கான ”மொல்னுபிரவீர்“ மாத்திரைகள் தொடா்பில் இலங்கை ஆராய்கிறது
கொவிட்-19க்கு எதிராக, இலங்கையில் ‘மொல்னுபிரவீர்’( Molnupiravir) மாத்திரைகளைப் பயன்படுத்துவது குறித்து, மருந்துப் பொருட்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தும் ராஜாங்க அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகிய அமெரிக்க மருந்து நிறுவனங்களால் Molnupiravir மாத்திரைகள் தயாாிக்கப்பட்டுள்ளன.
இதுவே கோவிட் நோய்க்கான முதல் வைரஸ் தடுப்பு மருந்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் சிகிச்சைக்காக வடிவமைக்கப்பட்ட முதல் மாத்திரையை இங்கிலாந்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் எதிர்பார்க்கப்படும் முதல் விநியோகத்தின்போது 480,000 மாத்திரைகளைக் கொள்வனவு செய்ய இங்கிலாந்து இணங்கியுள்ளது.
அமெரிக்கா சுமார் $1.2 பில்லியன் செலவில் 1.7 மில்லியன் மொல்னுபிராவிர் மாத்திரைகளை முன்கூட்டியே கொள்வனவு செய்துள்ளது.
அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட மற்ற நாடுகளும் மெர்க் நிறுவனத்துடன் இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.
இதற்கிடையில், இலங்கை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மருந்து குறித்து ஆராய்ந்து, விரைவில் பரிந்துரைகளை வழங்குமாறு கோவிட்-19 நிபுணர் குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
