இலங்கையில் போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கோவிட் ஒழிப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டிலுள்ள பாடசாலைகளில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர வகுப்புக்களை அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படுவதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் திறக்கப்படும் திகதியை கல்வி அமைச்சு தீர்மானிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவது குறித்து ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri