யாழில் மேலும் கோவிட் தொற்றாளர்கள் பதிவு
யாழ்ப்பாணத்தில் மேலும் கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னரும் இவ்வாறு கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறிகள் தென்பட்ட நோயாளிகளிடம், யாழ்ப்பாண வைத்தியசாலை அதிகாரிகள் பீ.சீ.ஆர். பரிசோதனை நடாத்தியிருந்தனர்.
இந்த பரிசோதனைகளின் போது ஐந்து கோவிட் தொற்று தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு ஐந்து தொற்று தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கோவிட் தொற்று பரவுகை அவதானிக்கப்பட்டால் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் கட்டுப்பாடுகளை அந்தந்த பகுதிகளில் அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து சுகாதார தரப்பினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.