முல்லைத்தீவு - மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலய மாணவனுக்கும் கோவிட் தொற்று!
முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்குச் சென்ற நிலையில் அவருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் மரண வீடு ஒன்றில் பங்குகொண்டார் எனவும், குறித்த மரண வீட்டுக்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் வந்திருந்தனர் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த மரண வீட்டில் பங்குகொண்டவர்கள் மற்றும் பாடசாலையில் மாணவனுடன் நெருக்கமாகப் பழகியவர்கள் உட்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று சுகாதாரத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 8 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam