மன்னார் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோவிட் தொற்றாளர்கள் (Photo)
மன்னார் மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (R.Vinodhan) தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கோவிட் நிலவரம் தொடர்பாக இன்று (24) விடுத்துள்ளஅறிக்கையிலே யே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23) மேலும் புதிதாக 14 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை 470 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் 2846 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2863 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri